பாவை வருகிறாள் பொன்னந்தி மாலையில்

பூவைத்த கூந்தலாள் பொட்டுவைத்த பூமுகத்தாள்
பூவையே வென்றிடும் புன்னகைத் தேனிதழாள்
பாவை வருகிறாள் பொன்னந்தி மாலையில்
தேவை எழில்வானின் வெண்ணிலவே உன்வருகை
பாவைமேல் தேனொளி தூவு

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Aug-24, 6:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே