ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா இரவி

ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும்

- கவிஞர் இரா. இரவி

*****

தமிழை மேடைகளில் புகழ்ந்து வருகிறீர்கள்
தமிழுக்கு உரிய அங்கீகாரம் தர மறுக்கிறீர்கள்

தமிழுக்கு நிதி ஒதுக்கீடு அதிகம் தாருங்கள்
தமிழ் இருக்கைகள் அயல்நாடுகளில் தொடங்குங்கள்

திருக்குறளை வானளாவ புகழ்ந்து தள்ளுகிறீர்கள்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மறுக்கிறீர்கள்

உலகப்பொதுமறையான ஒப்பற்ற திருக்குறளை
தேசிய நூலாக அறிவிக்க தயக்கம் காட்டுவதேன்

உலகின் முதல்மொழி தமிழே என்றே
உலகமே வழிமொழிந்து வருவதை அறியுங்கள்

கீழடியின் பெருமை உணர்த்துவது தமிழின் பெருமை
கீழடியில் எழுத்தறிவோடு வாழ்ந்தவன் தமிழன்

பன்மொழி அறிஞர் தேவநேயப் பாவாணர்
பைந்தமிழே உலகின் முதன்மொழி என்றார்

தமிழின் பெருமை சும்மா பேசிப் பயனில்லை
தமிழுக்கு உரிய மரியாதையை வழங்குங்கள்

இந்தி மொழிக்கு பெரிய வரலாறு இல்லை
இந்தியை பெருமளவில் பயன்படுத்தி வருகிறீர்கள்

தமிழ்மொழியை இந்தியா முழுவதும் படிக்கட்டும்
தமிழின் அருமை பெருமை அறியட்டும் மக்கள்

ஒன்றிய அரசு மொழியாக தமிழை அறிவியுங்கள்
ஒன்றியம் முழுவதும் தமிழைப் படிப்பார்கள்

அனைத்து தகுதிகளும் உள்ள தமிழ்மொழியை
அரசு மொழியாக உடன் அறிவிக்க வேண்டுகிறோம்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (25-Aug-24, 3:05 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 43

மேலே