மாங்கனிப் பூங்கன்னம்மா

சங்குக் கழுத்திற்குச் சங்கத் தமிழ்தரவோ
அங்க அழகிற்கு ஆயிரம்காஞ் சிப்பட்டு
வாங்கி அணிவித்து வண்ணத்தைப் போற்றவோசொல்
மாங்கனிப் பூங்கன்னம் மா

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

சங்குக் கழுத்திற்குச் சங்கத் தமிழ்தரவோ
அங்க அழகிற்கு ஆயிரம்காஞ் சிப்பட்டு
வாங்கி அணிவித்துன் வண்ணத்தைப் போற்றவோசொல்
தாங்கிய தாமரையால் தள்ளாடும் நூலிடையே
மாங்கனிப் பூங்கன்னம் மா

---இரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Aug-24, 11:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே