தூக்கி எறிந்த காகிதம்

அவள் ஏற்றி வைத்த தீபத்தில் தினம் தினம் எரிந்து போகும் என் காதல் நினைவும் ஒரு ஃபீனிக்ஸ் பறவை தான்... அழிவற்றவை

என் ஏமாற்றத்தில் அவளுக்கு கிடைத்தவை யெல்லாம் இன்னோர் அன்பு படுக்கையில் அரவணைப்பு, என் காதலில் கிடைக்காத ஆனந்தம் கட்டிலில் கிடைத்ததோ என்னவோ
நான் இங்கு பருவச்சாரலை துடைத்து எரிந்த காகிதம் ஆனேன்...

தூக்கி எரிந்த நீ ஆனந்த தாண்டவம் ஆடி தூய்மை ஆகின்றாய் உன் அழுக்கை சுமக்கும் நான் குப்பைத் தொட்டியாகின்றேன்... எனக்கென யாரும் இல்லை... அவளை பார்க்கத் துடித்த கண்கள் ஏன் கண்ணீர் வடிக்கிறது என் கண்கள் கூட எனக்காக இல்லை...

எழுதியவர் : கல்லறை (25-Aug-24, 12:46 am)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 93

மேலே