தளதளவென நடக்கும் தளுக்குநடை மினுக்கே
தளதள வெனநடக் கும்தளுக்கு நடைமினுக்கே
பளபள வெனபட்டுச் சேலை மினுமினுக்கே
வளவள வெனஎன்ன வேற்றுமொழி பேசுகிறாய்
மளமள வெனதமிழில் மானேநீ பேசாயோ
----அடிதோறும் பலவாய்ப்பாடுகள் அமைந்த கலிவிருத்தம்
தளதள வெனநடந்தி டும்தளுக்கு நடைமினுக்கே
பளபள வெனபட்டுச் சேலையாடை மினுமினுக்கே
வளவள வெனஎன்ன வேற்றுமொழி பேசுகிறாய்
மளமள வெனதமிழில் மானேநீ பேசாயோ
தள பள வள மள என்ற ஒரே அடி எதுகையும்
அடிதோறும் விளம் காய் காய் காய் எனும் ஒரே வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்
சீர் மோனை ----1 3 ஆம் சீரில் த டு ப சே வ வே ம மா