ஓரவிழியினால் பார்த்தாள் ஒருமுறை மாலைப் பொழுதில்

ஓரவிழி யினால்பார்த்தாள் ஒருமுறைமா லைப்பொழுதில்
சாரல்மென் மழைதூவும் சந்தியாவே ளைதன்னில்
நீராடும் என்காதல் நன்நெஞ்சம் களிப்பினிலே
மீராவோர் கண்ணனுக்கு மெல்லியலாள் இவளெனக்கோ

யாப்புத் தகவல்கள் :--
---ஓர சாரல் நீரா மீரா ---அடி எதுகைகள்
---ஓ ஒ சா ச நீ ந மீ மெ ---1 3 ஆம் சீரில் மோனை --இது பொழிப்பு மோனை
அடிகள் அனைத்திலும் காய் சீர் வாய்ப்பாடு அமைந்த கலிவிருத்தம்
கம்பன் விஞ்சி நின்ற பாவினம் இது

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-24, 9:01 am)
பார்வை : 69

மேலே