துளி வார்த்தை பேசிடு
ஐந்திணை நிலத்திலும்
அறுசுவையும் உண்டு
அகம் மகிழ இருந்தவனுக்கு
உறைபனி தேசமிதில்
உறுதுணை எவருமின்றி
உறக்கமும் எதிரியாயிற்று
நடுநிசி இரவில்
நடுங்கும் குளிரில்
நங்கையின் நினைவாயிருக்கையில்
துயர் மறக்கும் மருந்தென
துளி வார்த்தை பேசிடு
தூங்கும் வரம் தந்திடு