வெறியன்

வெறியன்

கத்தி எடு
கடவுளை வெட்ட !
கருணை அற்ற இந்த
கடவுள்களை எல்லாம் வெட்ட கத்தியை எடு

கயவர்கள் (உலகம்) எல்லாம்
ஒன்று கூடி
கொத்து கொத்தாய்
எங்களை கொன்ற
போது!
நல்லூர் கந்தன்
எங்கு போனான்?
மருதடி பிள்ளையானும்
எங்கு போனான்?
இல்லை
வயல் ஓரம் எல்லாம்
அமர்ந்திருக்கும்
அம்மனும் காளியும்
தான் எங்கு போனாள்?

இப்போ Gazza !
தினம் தினம்
கொல்கிறானே(West)
எங்கு போனான் Allah?

கத்தியை எடு,
இந்த நாத்தி அற்ற
கடவுள்களை எல்லாம்
வெட்டி வீழ்த்திட!
அந்த பாளை சீவும் கத்தியை கொடுடா.

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (13-Sep-24, 10:30 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 65

மேலே