மகா பாவம் செய்திடும் மனிதர்கள்

பெண்களின் பாதுகாப்பு மானம் கற்பு என்றெல்லாம் அளக்கும் மனிதனே
சினிமாக்களில் பெண்களை கெடுப்பதுபோல் நடிப்பவன் மனிதன்தானே
நிஜவாழ்வில் பல பெண்களின் கற்பை சூறையாடுவதும் மனிதன்தானே
கடவுள் போன்ற சிறுமிகளை பாலியல் கொடூரம் செய்வது மனிதன்தானே
மிருக வேட்கையை மட்டும் அனுபவித்துவிட்டுச் செல்கிறாயா மனிதனே
சிறுமி குமரி வயதானவள் எவரானாலும் கொன்றுவிடுகிறாயே மனிதனே
நீயும் ஒரு குழந்தையாக இருந்துள்ளாய் என்பதை மறந்தாயா மனிதனே
உன் தாய் வயிற்றில் உனக்குச் சகோதரி பிறந்தாள் அறிவாயா மனிதனே
உனக்குத் திருமணம் ஒரு பெண்ணுடன்தான், உணர்கிறாயா மனிதனே
உனக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கலாம் என்று அறிவாயா மனிதனே
தாயின்றி நீயில்லை பெற்றோர் வளர்ப்பின்றி நீ ஒன்றுமில்லை மனிதனே
பெண்ணின்றி குடும்பம் இல்லை அவளின்றி மகிழ்ச்சியில்லை மனிதனே
பெண் பாபம், ஆனால் அவள் சாபம் பொல்லாதது அறியாயோ மனிதனே
பெண்கள் மீது இழைக்கும் தீங்கிற்கெல்லாம், நீ பதில் சொல்லவேண்டும்
ஆனால் நீ செய்யும் பாவங்களுக்கு விளைவு நிகழும்போது, என்ன ஆகும்?
உன் கண்கள் குருடாகி விடும், உன் வாய் கோணிக்கொண்டு இருக்கும்
நீ மூச்சை இழுத்துவிடும் காற்றும் அஞ்சி ஓடும், உன் முகமும் சவமாகும்
உன் கைகள் இழுத்துக்கொண்டு, கால்கள் விறைத்துகொண்டு தள்ளாடும்
உன் பாலியல் உறுப்பு சிதைந்து, சிறுநீரும் கழிக்காமல் நீ அவதியுறுவாய்
தாளாத வயிற்றுவலி உன் பெருங்குடலை வாட்டி கணையத்தை அழிக்கும்
உன் உலர்ந்த வாய்க்கு ஒரு சொட்டு நீரின்றி பசிக்கு சோறின்றி தவிப்பாய்
உன் இதயம் அடித்துக்கொள்கையில் புலிகள் உன்னை அடித்து கொல்லும்
மேலே கூறியவை உனக்கு கிடைக்கின்ற தண்டனையில் ஐந்து சதவிகிதம்
எவரும் காணாத நரகவேதனை, சத்தியமாக உனக்குண்டு 100 சதவிகிதம்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (10-Sep-24, 7:41 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 18

மேலே