ஆசிரியர் தினம்
ஆசானே எங்கள் ஆசானே
உங்களின் அறிவுச் சுரங்கத்தில்
எங்களை வார்த்தெடுத்து
புடம் போட்ட தங்கமாக மாற்றிய
*சொக்கத்தங்கம்* நீங்கள்
எங்கள் ஆசானே
உங்களை எங்கள் உள்ளத்தில்
உயர்ந்த பீடத்தில் அமர்த்தி
அன்றாடம் பூஜித்து வருகின்றோம்
செப்டம்பர் திங்கள் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தில்
உங்களை வணங்கி
மற்றட்ட மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆசான்கள் அனைவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!!
--கோவை சுபா