கண்ணன் குழல் ஓசை
பிருந்தாவனத்தில்..
கூவும் குயில் சோலை அது
கண்ணன் மாடு மேய்த்து
வந்தடைந்தான் ஆங்கு
பூத்துக் குலுங்கும்
செண்பக மரத்தின் கீழே கண்ணன்
தன் சிறு தாமரை வாயில்
வேய்ங்குழல் வைத்து ஊதத் துவங்க
கூவும் குயில் எல்லாம் கூவ மறந்தன
ஆடும் மயில் எல்லாம் ஆட மறந்தன
புல் மேய மறந்து ஆயெல்லாம்
கண்ணன் காலடியின் கீழே .....
ஓடும் யமுனா நதியும் சற்றே விலகி வந்து
கண்ணன் காலடிக்கு அபிஷேகம் செய்து
பின் தன் போக்கில் போனது
வானில் புள்ளெல்லாம் பறக்காது போயின
எங்கோ தூரத்தில் இருக்கும் கோகுலத்து
கோபிமாரின் காதில் கண்ணன் கீதம் கேட்க
அவர்கள் தம்மையே மறந்து கண்ணா
மணிவண்ணா வா வா என்று பாடியே
குழல் ஓசை வந்த திக்கு தேடி ஓடினாரே