😍வேண்டுமடி🥰

சொத்து சொகம் வேண்டாமடி
நீ இருந்தா போதும்........
வெச்சு வெச்சு பாத்துப்பேன்டி
உசுருக்கு உசுரா நானும்.........

கொட்டி கொட்டி தீக்கனூன்டி
அன்ப உம்மேல நானும்.........
தொட்டு தொட்டு பாப்பேன்டி
ஒடம்பு சரியில்ல நாலும்........

அணைச்சு அணைச்சு தூங்குவேன்டி
உனக்கு குளிரடிக்கும் போதும்........
கட்டிப்பிடி வைத்தியத்த
சொல்லிக் கொடுத்தியே நீயும்........

பெத்தவள கண்முன் காட்டித்தான்டி
உம்பக்கம் இழுத்துட்டியே என்ன........
இரவு பொழுதா காத்திருந்த
உனக்காக ஒவ்வொரு நாளும்.......

கொலையா கொல்லுதடி
மனசுகுள்ள உன்நெனப்பு என்னாலும்......
தெரிஞ்சு தெரியாம நடிக்கிரியே
பாதகத்தி நீயும்........

கோழி கூவும் நேரத்தில
என்ன நீயும் எழுப்ப.........
என்னாச்சோ ஏதாச்சோன்னு
பதறிப்போயி நான் பாக்க..........

ஒன்னுமில்ல மச்சான்னு எழுந்துரீங்க
விடிஞ்சிருச்சுன்னு நீ சொல்ல........
சிரிச்சுகிட்டே சிந்திக்காம
ஓடிவர உம்பின்னால நானும்.........

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (25-Sep-21, 8:11 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 237

மேலே