மாசு

மாசு
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
உயிரியல் தாயின் வயிற்றில் பிறந்த
விலங்கு தாவரம் நிறைந்தது உலகம்...
தாவர இலையை விலங்கு உண்ணும்
விலங்கின் எருவைத் தாவரம் உண்ணும்...

மாசு எப்படி மண்ணுக்குப் பரிசு - அதை ஏன் ?
வாரியம் அமைத்து காக்கனும் அரசு..
நஞ்சை விதைக்கும் ஆலைகள் நிறுவ
லஞ்சம் வாங்கி சான்றுகள் தரவா ?

அப்பாவி உயிரை விதையாய் போட்டால்
அதிகாரி வீட்டில் விளையும் தங்கம்..
எந்த பாடத்தில் படித்திட்ட விதியிது
அரசியல் வாதியையும் அசத்திடும் மதியிது...

எந்தத் தேர்வை எழுதி தலைவா
இந்தப் பணியில் நீயும் சேர்ந்தாய்..
நாட்டு குப்பையில் என்ன அசத்தல் !!!! ஆனால்
வீட்டுக் குப்பையில் எப்படி அசந்தாய் ?

ஓய்வு பெற்றிட ஒருநாள் இருக்க -- லஞ்சம்
ஒழிப்போர் உந்தன் வீட்டைப் பெருக்க
ஒருநாள் குப்பை எடையைப் போட்டால்
பதினோரு கிலோவில் தங்கம் கிடக்கு...

மூலை முடுக்கெல்லாம் ஒட்டடை அடித்தால்
சாக்கு சாக்காய் வெள்ளிப் பொருட்கள்..
சமையற் கூடத்தில் அடுப்பு எரிக்க
சந்தனக் கட்டை விறகாய் கிடக்க..

இருப்பது வாரியத் தலைவர் வெங்கடேசனா ? இல்லை
திருப்பதி ஏழுமலை வெங்கடேசனா ?

ம்ம்ம்ம்...

பறிமுதல் என்பது செய்தியில் தெரிக்கும்
பங்கு போட்டதும் வழக்கை மறைக்கும்.....
மாசு இங்கு எதுவென்று சொல்ல
மனிதனைத் தாண்டி வேறொன்றும் அல்ல..

🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

எழுதியவர் : க.செல்வராசு (25-Sep-21, 9:10 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : masu
பார்வை : 63

மேலே