கடைசிக் காதல்

கடைசிக் காதல்.

கந்தன் தேடும்
காதல்,
கவலைகள்
கரைக்கும்
காதல்.

தாயிடம் பார்க்காத
காதல்,
தாரத்திடம் கிடையாத
காதல்.

வயதோடு வரும்
காதல்,
வாழ்வு சொல்லிய
காதல்.

தனிமையில் ,
தன்னிலை மறையும்
போது,
பிறக்கும் காதல்.

"கந்தனோடு
கந்தனாக வேண்டும்
என ஏங்கும் காதல்"
இதுவே கந்தன் தேடும்
காதல்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (26-Sep-21, 7:00 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 87

மேலே