அவள் - ஓர் மழை

கருமேகப் போர்வைக்குள்
புதைந்த நிலவு
மின்னல் ஏந்தி
தேடும் வானம்

வெற்றிக்களிப்பில்
உரசும் மேகங்கள்
உறுமி மேளம் பாடிஆட
சிதறும் பனி மலர்கள்

சுழன்றடிக்கும் காற்றில்
சாரலாய் என் முகம் தழுவ
குடை பிடிக்கிறது
கார்மேக குழல் ஒன்று

துளித்துளியாய் மண்ணில்
விழும் தூறல்கள் இசையாக
காதோரம் புதிய சங்கீதம்
பாடுகிறாள் பதுமையவள்

மெல்ல மெல்ல
நழுவிய இதயம்
அவள் வசத்தில்
முழுவதும் புதைய

தேக்கிவைத்த காதலை
அன்றே நின்று கொட்டும்
மழைபோல் இன்றே கொட்டி
விட்டுச் செல்கிறாள்

வெள்ளத்தில்
சிக்கிய
சென்னையாய்
காதலில் எந்நிலை!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (10-Nov-21, 8:10 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 273

மேலே