அவிழ்க்க முடியாத முடிச்சு 6 🎻
************************************
கணுக்காலில் அடிபட்டதால்,
கட்டிலில் கிடந்தேன்
நடக்க முடியாமல்.
பாவமென்று
பார்த்துப்போக
பாசக்காரி வந்தாள்.
அந்த நேரம்,
டிவியில்
ஓர் விளம்பரம்.
"மியூச்சுவல் ஃபண்ட்
முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு
உட்பட்டவை...
..
...
திட்டம் சார்ந்த ஆவணங்களை
கவனமாக படிக்கவும்..."
டிவியில் இது சொல்லிக் கொண்டிருக்கும்போதே
பார்கவி உள்ளே வந்தாள்...
எனக்கு இப்படி தோன்றியது,
இவளுடைய கண்கள்
காந்தமாக மாறும்
அபாயமுள்ளவை. இவளிடம்
பேசும் முன்
கவனமாக யோசிக்கவும்...
என்ன...
ஐயாவுக்கு
ஒரே ரொமாண்டிக் மூட் போல...
என்றாள்,
வாங்கி வந்த ஆரஞ்சு பழத்தை
உறித்தபடியே....
அதெல்லாம் ஒன்னுமில்ல...
நீ
எனக்கு பிடிச்ச மாதிரியே
மஞ்சள் சேலை கட்டி
மல்லிப்பூ வச்சிருக்கியே
அதான்....
அப்பட்டமாக வழிந்தேன்.
ரொம்ப வழியாத...
உன்னை எனக்கு பிடிச்சதுக்கு
ஒரேயொரு காரணம் தான்.
அந்த காரணம்
உன் கழுத்துக்கு மேல இருக்கு..
என்றாள்..
என் கண்களா...?. என்றேன்.
அய்ய... அது திருட்டு முழி..
என்றாள்.
அப்போதுதான் சில மாதங்களாக
காதலிக்க ஆரம்பித்திருந்தோம்...
எனவே அவள்
என் உதடுகளை பற்றி சொல்லவில்லை.
பின் வேறு எது....
யோசிக்க யோசிக்க
சுவாரஸ்யமாக இருந்தது.
மக்கு மாமா...
உன்னோட மூளைய வச்சிதாண்டா
என்னை மயக்கிட்ட..
என்றாள்.
இத பாருடா...
நம்மகிட்டயே முடிச்சு போட்டு பேசுறா...
என்று
நினைத்துக் கொண்டேன்.
காதலிக்க ஆரம்பித்த புதுசு
என்பதால்
முத்தம் என்பதெல்லாம்
இன்னும் நாங்கள்
பழகவில்லை...
(இதெல்லாம்கூட பழக முடியுமா?)
அவளே
என் மூளையைப்பற்றி பேசிவிட்டு,
என்னை
மக்கு மாமா
என்று வேறு
சொல்லி விட்டாளே...
நான் சும்மா இருக்க முடியுமா...
நேரடியாக சீண்டினேன்.
உனக்கு
என் மூளை பிடித்திருக்கிறது..
ஆனால்
உன் உதட்டை கடிப்பது தான்
எனக்குப் பிடிக்கும்...
என்றேன்.
அநேகமாக
பொய்யாகத்தான்
கோபப்பட்டிருப்பாள்,
ச்சீ... என்னடா
இப்படியெல்லாம் பேசுற...
அருகிலிருந்த
தலையணையால்
என் தலையில்
அடிக்க ஆரம்பித்தாள்.
நானும்
எத்தனை முறை தான் சொல்வது,
இனி உங்களிடம்
இதை சொல்ல மாட்டேன்,
'அவிழ்க்கவே
முடியாத முடிச்சை
அவிழ்ப்பது
சுவாரஸ்யம்
எனில்,
அப்படி ஒரு
முடிச்சை போடுவது
அதைவிட சுவாரஸ்யம்...'
ஒரு வழியாக
தலையணையால்
அடிப்பதை
நிறுத்தி விட்டு கேட்டாள்...
ஏண்டா,
அப்படி சொன்ன...?.
நான்
சொன்னேன்,
இப்பவும்
அத தான் சொல்றேன்,
உன் உதட்டை கடிப்பது பிடிக்கும்...
அதாவது
உன் உதட்டை நீயே கடிப்பது,
எனக்கு ரொம்ப பிடிக்கும்....
அவ்வளவு தான்....
அவ்வளவு நேரம் இருந்த கோபம்
எங்கே போனது என்று
தெரியவில்லை....
வழக்கமான வசனம் தான்...
நீ
சரியான
ஃப்ராடுடா...
என்றவள்
முதன் முறையாக
முத்தமிட்டாள்....
சும்மாவா சொன்னாங்க,
முதல் முத்தத்தை
மறக்க முடியாது
என்று..
அன்று
எங்கே
எத்தனை முத்தங்கள்
என்று விலாவாரியாக
சொன்னால்,
நீங்கள் வெட்கப்படும்
வாய்ப்பிருப்பதால்.........
..
..
..
முற்றும்.
✍️கவிதைக்காரன்