விழி நீலத்தில் காதல் அழகு

மலருக்கு மௌனம் அழகு
மௌனத்தில் உன் புன்னகை அழகு
புன்னகையில் விரியும் முத்தழகு
முத்துக்கள் பிறந்த கடலழகு
கடல் நீலம் உன் விழியில் அழகு
விழி நீலத்தில் காதல் அழகு
காதல் தலைவி நீ எனக்கழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-22, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே