நான் தீட்டிய முதல் ஓவியம் நீ 555
***நான் தீட்டிய முதல் ஓவியம் நீ 555 ***
ப்ரியசகியே...
நான் காதலை உணர்ந்ததும்
கல்வியை உணர்ந்ததும்...
நாம் அறிமுகமான
மேல்நிலை பள்ளி பருவத்தில்தான்...
உனக்குள்ளும் எனக்குள்ளும்
காதல் இருந்தும் சொல்லிக்கொள்ளாமல்...
நாம் இருவரும் மனதுக்குள்
ஆடுகிறோம் கண்ணாம்பூச்சி...
கைகளை கோர்த்து
உலாவரும் நாம்...
கண்களோடு கண்கள் கோர்த்து
வான் நிலா ரசிப்பது எப்போது...
அன்று உன் துப்பட்டாவால்
என் முகம் துடைத்த நீ...
நாளை உன் முந்தானையில்
என்னை மூடி கொள்ளேன்...
மாற்றார்
என்னை காணாதவாறு...
விடிந்தும் மனதுக்குள்
கலையாத கனவை போல...
வாழ்வின் கவிதையாய்
நீ வந்தாய் என்னுள்...
நான் தீட்டிய முதல் ஓவியமாய்
நீ என்னுள் பதிந்துவிட்டாய்...
இடைவெளியில்லாமல்
படபடவென்று பேசுபவள் நீ...
நீ பேசும் நேரத்தில்
உன் கன்னத்தில் முத்தமிட்டு...
வெளிப்படுத்த வேண்டும்
நான் என் காதலை...
நீ ஏற்றுக்கொண்டால்
உன் மூச்சுக்காற்றால்...
என் இதயத்தை முத்தமிட்டு செல்
உணர்ந்துகொள்கிறேன் நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***