எதுவும் வேண்டாம் பெண்ணே
எதுவும் வேண்டாம் பெண்ணே
உன் இதயத்தில் இடம் வேண்டும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே,
என் விழியில் நீ உறங்கினால் போதும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன் நிழலில் நினைவாய் நான் சாய்ந்தால் போதும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன் உதடாய் நான் மாற வேண்டும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன் கருங் குழல் கற்றையைத் தொடும் தென்றலாக நான் வந்து தீண்ட வேண்டும் பெண்ணே.
எதுவும் வேண்டாம் பெண்ணே;
உன்றன் கார்கூந்தலில் சூடும் நறுமலராய் வந்து
தினம் தினம் தங்கினால் போதும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன் கருவிழியைக்காக்கும்
இமையாக நான் நின்றால் போதும்; பெண்ணே
எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன் பிறை நெற்றியின் மையத்தில் பொட்டாய் வந்து ஒட்ட வேண்டும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன்றன் காதில் தொங்கட்டானாய் தொங்க வேண்டும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன்றன் சுவாசமாய் நான் வந்து தந்க வேண்டும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே
உன்றன் செவ்வாயிலிருந்து உதிரும் குரலாய் இருந்தால் போதும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே
என் கனவில் நீ வந்து என்றன் உறக்கத்தை கெடுத்து உறவாடினால் போதும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன்றன் மானத்தைக் காக்கும் முந்தானையாய் இருந்தால் போதும் பெண்னே;
எதும் வேண்டாம் பெண்ணே
உயிராய் நீ என்றான் உடலுக்குள் புகவேண்டும் பெண்னே;
எதும் வேண்டாம் பெண்ணே
உரிமையாய் உறவாட வரவேண்டும் பெண்ணே;
எதும் வேண்டாம் பெண்ணே,
பால் நிலவு சொட்டும் போது,
பழகிய இருலில் உன்றன் விரலை பிடித்து உல்லாசமாய் பவணி வர வேண்டும்.
பெண்ணே எதுவும் எதுவும் வேண்டாம் பெண்ணே
உனக்கு ஊட்டும் உன்றன்
கரமாய் நான் ஆக வேண்டும் பெண்ணே;
எதுவும் எதுவும் வேண்டாம் பெண்ணே நீ துகில்கொள்ளும்
படுக்கை விரிப்பாய் கிடந்தால் போதும் பெண்ணே;
எதுவும் வேண்டாம் பெண்ணே
உன்றன் பாதடி ஓசையாய் நான்
வரவேண்டும் பெண்ணே;
எதுவும் எதுவும் வேண்டாம் பெண்ணே,
உன் நாணமாய்
நான் நனையவேண்டும் பெண்ணே;
எதுவும் எதுவும் வேண்டாம் பெண்ணே
ஏன் என்னை நினைத்தாய் பெண்ணே

