தூரிகை வரைந்த காரிகையே
தூரிகை வரைந்த காரிகையே !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
தூரிகை வரைந்த காரிகையே பேரெழிலே /
பேரெழிலே இந்தப் பேருலகின் அதிசயமே /
அதிசயமே கொஞ்சும் அழகியலே புதியவளே /
புதியவளே நெஞ்சில் புகுந்தவளே தேவதையே /
தேவதையே விண்ணின் மின்மினியே பூமகளே /
பூமகளே புகழும் பொன்மகளே தமிழணங்கே /
தமிழணங்கே என்றும் தழைப்பவளே நிறைமதியே /
நிறைமதியே ஓவியமாய் நிலைப்பாயே தூரிகையால் //
-யாதுமறியான்.