எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மிஞ்சியது 2. பெரியவர் வேதநாயகத்தின் பின்புலம் வறுமை. தன்...

மிஞ்சியது  2.


பெரியவர் வேதநாயகத்தின் பின்புலம் வறுமை. தன் முயற்சியால் தன்னையும் தன் குடும்பத்தவர்களையும் வாழவைத்து மகிழ்ந்தவர். ஏன் தான் பிறந்து வளர்ந்த ஊரையோ மக்களையோ மறக்காதவர்.

ஊரில் உள்ளபோது நண்பர்கள் என்று சொல்வதற்கு அவருக்கு யாரும் இருந்ததில்லை. ஏழ்மையோடு எதுவும் ஒட்டாது. வாழ்வில் வெற்றி நடை போட்ட காலகட்டத்தில் நண்பர்கள் சேர்ந்தார்கள். எழுத்தாளர்கள் அரசியல் வாதிகள் அவரை உதாரணம் காட்டி எழுதினார்கள் பேசினார்கள். அவர் எல்லாவற்றையும் புன்புறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.


காலம் ஓட அவர்கள் கலைந்தார்கள். முதல் அவரின் அன்பு மனைவி. பின்பு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள். இப்போ அவருக்கு அவருடைய காய்கறித் தோட்டமே

பொழுது போக்கு. இது அவருக்கு வறுமையிலும் அன்பாக இருந்த அவரின் பெற்றோர்களை ஞாபகப்   படுத்தியது. டேய் " வேதம்" வாடா சாப்பிட என்று அவரையும் பக்கத்தில் வைத்து ஏதோ கஞ்சியோ கூழோ அவரோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

ஒரு நாள் தன் தோட்டத்தில் நின்ற கத்தரிக்காய் செடியைப் பார்த்தார். நன்றாகக் காய்த்த அந்த செடி ஏனோ இப்போ அதில் இரண்டே இரண்டு காய்கள்.

அறுக்கப்போனவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை இருக்கட்டும் என்று விட்டு விட்டார். அது அவருக்கு அவரோடு மிஞ்சி நிற்கும் இரண்டு நண்பர்களை ஞாபகப் படுத்தியது போலும். ஒருவருடைய பெயர் இறைவன். இவர் அவருக்கு ஞாபகம் வந்த நாள் முதல்  வள்ளுவன் ஈரடியை  ஞாபகப் படுத்தி நின்றார். மற்றவருடைய பெயர் மனம். இவரும்  அவரை விட்டு விலகவே இல்லை. இவர்கள் இருவரும் அவரைத் தனியே விட்டு சென்றிருந்தால் தன் நிலை இப்போ எப்படி இருக்கும் என்று நினைத்தார் போலும். தான் நின்று கொண்டு இருந்த இடத்திலேயே மண்டி இட்டு அன்னையே! என்று அந்த கத்தரிப் பூவை கையால் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டார். கண்களை கசக்கியபடியே எழுந்து போய் கட்டிலில் படுத்தவர் கண் அயர்ந்துவிட்டார்.  மதியம் உணவுடன் வந்த அன்னம் வெளியில் நின்றபடியே ஜயா என்று அவரை அழைத்தாள். பதில் இல்லை. எட்டிப் பார்த்தாள். அவர் கட்டிலில் படுத்திருப்பது அவளுக்கு தெரிந்தது. அருகே சென்று பார்த்தாள். அவரின் முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை தெரிந்தது. தான் கட்டி இருந்த சேலைத் தலைப்பால் கண்களை துடைத்தபடி அயல் வீட்டுக்காரரை கூப்பிட்டு

சொல்லி விட்டு அன்னம் கிளம்பிவிட்டாள். அவளுக்கு இன்னும் சில வீடுகளுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டிய வேலை இருந்தது.


ஆக்கம்

சண்டியூர் பாலன்.

நாள் : 28-Jul-21, 10:26 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே