ஒரு வானவில்

அந்தி வேளை
சூரியனின் தடத்தை எல்லாம்
விழுங்கியிருந்த கார்முகில்
ஒரு சில துளிகளை பருகி
மயங்கிக் கொண்டிருந்த பூவிதழ்கள்
அரசுக்கு கணக்கு காட்டிய
அந்த சிறு பள்ளத்திலிருந்து
நிரம்பி வெளியேறிய நீர்
சாக்கடையில் விட்ட கப்பலுக்கு
கன்னத்தில் கைவைத்த ஒரு சிறுமி
சிதறும்படி உதறிக் கொண்டிருந்த நாய்

பார்வை ஓட்டத்தில்
தாழ் திறக்கும் ஒரு சாளரம்
வளையலோடு நீண்டு வந்த ஒரு கை
கம்பிகளின் வியர்வை துடைக்க
உற்று நோக்குகிறேன்

மெல்ல விலகும் மேகத்திலிருந்து
தப்பி ஓடி வந்த கதிர்கள்
விண்ணில் மஞ்சள் பூச
சாளரக் கம்பிகளில் ஒருவள் எட்டிப்பார்க்கிறாள்
யார் அவள் என கூர்ந்து பார்க்கையில்
தோன்றுகிறது
விண்ணில் ஒரு வானவில்

எழுதியவர் : கி. கவியரசன் (8-May-17, 4:26 pm)
Tanglish : oru vaanavil
பார்வை : 75

மேலே