முன்னாள் காதலி
நேற்று வந்தாள்
எப்படி இருக்கிறாய்?
உன்னை பார்த்து வெகுநாள் ஆனது
நீயின்றி நீரும் இறங்க மறுக்கிறது
ஏன் இப்படி இளைத்து விட்டாய்?
சாப்பிடுகிறாயா? இல்லையா?
என கேட்டவாறு அருகில் அமர்கிறாள்
வைத்த கண் வாங்காமல் பார்கிறாள்
ஏனோ நேரக்கணக்குகள் போடவில்லை மனம்
கைகோர்த்து மடிசாய்ந்தாள்
புதிதாய் வெட்கப்பட்டாள்
சீண்டினாள் சிணுங்கினாள்
முகமறிந்த சிலர்
ஏன் இப்போது நான் தங்கியுள்ள
வீட்டு உரிமையாளர் வந்த போது கூட
பிணைப்பை தளர்த்தவில்லை அவள்
வருபவர் எல்லாம் யார்? யார்? என கேட்க
எப்படி சொல்வது
இவள் திருமணம் ஆன என்
முன்னாள் காதலி என
அழுத்தம் அதிகமாகி
பிடி தளர்த்தி எழுந்தேன்
ஒன்றும் புரியவில்லை
இந்த கனவு ஏன் எனக்கு வந்தது என?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
