கிறுக்கியின் கிறுக்கல்கள் - 02

கிறுக்கியின் கிறுக்கல்கள் - 02

பக்கத்தில் நீ இருந்தும்
விக்கிக்கொள்கிறதெனக்கு
"நினைவுகள்"

உன் வெட்கத்தை
வேடிக்கை பார்க்கிறது
"என் மச்சங்கள்"

நீ என்னருகில் நின்றுகொண்டிருக்க
வேகமாய் அதிவேகமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
"கடிகாரம்"

நின் மூச்சுக்காற்றில்
கருகிவிடுகிறது
"என் கோபங்கள்"

என் கவியனைத்தும்
உன்னிலிருந்து திருடப்பட்டவைதான்
எனினும் திகட்டிவிடுகிறது
"உன்னருகில்"

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (8-May-17, 5:17 pm)
பார்வை : 113

மேலே