நிஷா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நிஷா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Oct-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 370 |
புள்ளி | : 86 |
என் சுகங்களையும் சோகங்களையும் சேமித்து வைக்கும் பொக்கிஷ பெட்டி
*(இந்த எழுத்து .காம்)
நோயாளி : டாக்டர்... நான் செத்துப் போயிடுவேன்னா....?
டாக்டர் : இதென்ன பச்சப்புள்ளத்தனமா ஒரு கேள்வி..?
என்ட வந்துட்டு....!
நோயாளி :அப்படின்னா....?
டாக்டர் : அப்படித்தான்...!
நெடுந்தூரம் இருந்து கொண்டு நினைவில் மட்டும் நெருங்கி வருகிறாய்
கனவில் மட்டும் காதல் செய்து காலங்களை சேமிக்கிறாய்
கண்களிலே தேங்கும் நீரில் காதலை பயிர் செய்கிறாய்
நெருங்காமல் உயிருள்ளே ஊடுருவி வன்முறை செய்கிறாய்
வானத்தில் நின்றுகொண்டு வா என அழைக்கிறாய்
கை நீட்டி தொட நினைத்தால் இன்னும் நெடும்தூரம் செல்கிறாய்
தொலைவானது நம் உடல்கள் அல்ல -நம்
உள்ளங்கள் என்பதை எப்போது உணர்வாய்
நெடுந்தூரம் இருந்து கொண்டு நினைவில் மட்டும் நெருங்கி வருகிறாய்
கனவில் மட்டும் காதல் செய்து காலங்களை சேமிக்கிறாய்
கண்களிலே தேங்கும் நீரில் காதலை பயிர் செய்கிறாய்
நெருங்காமல் உயிருள்ளே ஊடுருவி வன்முறை செய்கிறாய்
வானத்தில் நின்றுகொண்டு வா என அழைக்கிறாய்
கை நீட்டி தொட நினைத்தால் இன்னும் நெடும்தூரம் செல்கிறாய்
தொலைவானது நம் உடல்கள் அல்ல -நம்
உள்ளங்கள் என்பதை எப்போது உணர்வாய்
முற்றி போன காதல் கொட்டிக்கிடக்குது வான் வீதியிலே
ஒன்றொன்றாய் சேகரித்தேன் அதை சேர்க்கும் இடம்தான் தெரியவில்லை
சொட்டு சொட்டாய் வீழும் கண்ணீர் -காதல்
செடி பட்டுப் போகாமல் பார்த்துகொள்ளும்
முட்டி நிற்க்கும் உன் நினைவுகளெல்லாம் -ஏன்
வந்ததென்று பகலைத் திட்டும்
வந்து போகும் தென்றல் காற்றும் என் ஆன்மாவை சீண்டிப் போகும்
அது இல்லை என்று தெரிந்த பின்னே ஏமாற்றத்தில் சோர்ந்து போகும்
இருளின் மீது கொண்ட காதலை சில ஒளிகளும் இங்கே சோதிக்கும் -என்
இமைகள் திறவா நிலை கண்டு இருளிலே அதுவும் மூழ்கிப்போகும்
வண்ணங்கள் மீது காதல் கொண்டேன் அதில் வாழும் உந்தன் நினைவுகளால்
கண் மூடினேன் அ
மக்கா மாநகரில்
எத்தனை
ரோஜாக்கள் பூத்தாலும்...
முஹம்மத் என்னும்
ராஜ ரோஜாவுக்கு நிகராக
ஒரு மலரும் இதுவரை
பூத்ததில்லை...!
முஹம்மத் என்னும் பெயரை
ஒருமுறை உச்சரித்தால் போதும்
ஆன்மாவோ நறுமணக் கடலில்
மூழ்க ஆரம்பித்து விடும்...!
அண்ணல் நபியின்
பொற்பாதங்களோ
பூமிக்கு ஒத்தடம்...!
சீறாவே...
சூராவே...
உமது உமிழ் நீர்
நரக நெருப்பின்
தாகம் தீர்க்கும் அரும்பானம்...!
பொன்னாடை போர்த்திய
பெருமானே...
வாழ்வில் ஒரு பொழுதும்
பொன்னாடைகளை அணிந்ததில்லையே..!
பாலைவனத்து அனலுக்கு
வெப்பம் தணிக்க வந்த
அண்ணல் நீங்கள்...!
சுவர்க்கம்
உமை அழைத்தது
அதன் சுவர்க்கத்தைக் காண...!
அதுதான்
விடிந்தாலும் பிரிந்துட ஏங்குதே நிலா -உன்
பிறை முகம் கண்ட மயக்கத்தில்
மலர் கூட உன் மடி உறங்க ஏங்குதடி -உன்
பட்டு வண்ண மேனியை தீண்டியதால்
எச்சில் ஒழுக நீ சிரிக்க எட்டி நிற்கிறதே ஈரேழு
உலகின் அழகும்
விரல்களின் ஜாடையோ கதை பேசும் நூறு
புரியாத பாசையும் புரிந்திடும் உன்னோடு
விரல் சூப்பும் அழகும் விழி பேசும் கவியும்
உள்ளத்தை சிறையிடுதே
கவி பேசும் உயிரே கவலை இல்லா மலரே
கண்மூடி நீ உறங்கு
காலையிலே நீ மலரு
கீழே விழுவதை விட அதை கண்டு -சிரிப்பவர்களை
கண்டுதான் இந்த உலகம் அஞ்சுகிறது .
உன்னை கடந்து சென்ற பறவை நான்
பாதை மறந்து நிற்கின்றேன்
உன் வாசம் தீண்டிய வண்டு நான்
மணத்தில் மயங்கி நிற்கின்றேன்
உன் தேகம் தீண்டிய காற்று நான்
சுவாசம் திணறிப் போகின்றேன்
உன் மேனியை போர்த்திய ஆடை நான்
உடல் விட்டு விலக மறுக்கின்றேன்
தாய் மடியை தேடிடிடும் குழந்தை நான்
உறக்கம் தொலைந்து கிடக்கின்றேன்
உன் விழிகளை தழுவிடும் கனவு நான்
வழி தேடியே நானும் அலைகின்றேன்
உன் விரலிலே கிடந்திடும் மோதிரம் நான்
விரல் அணைப்பிலே மயங்கி உறங்குகிறேன்
உன் அணைப்பினை கேட்டிடும் தலையணை நான்
இரவினை தேடி அலைகின்றேன்
என்னை யாரென்று கேள்?
எங்கிருந்து தொடங்கியது உன் நேசம்
என்று விசாரணை செய்! உக்கிரமான என்
கோபங்களில்
இருந்து எதை உனக்கு சொல்ல
முயன்றிருப்பேன்
என்று புரிந்துணர்வு கொள்.
ஒவ்வொரு முறையும் விட்டு விலகுவேன்
என்றுரைத்ததெல்லாம் விலகி இருக்க
இயலாதவளின் சொற்கள் என்று அறி;
யசோதையைப் பிரிந்து சென்ற புத்தனின்
ஞானத்தில் முதலில்
தோன்றியது அப்படியான
பிரிவு அவசியமற்றது என்ற சத்தியம் தான்
என்ற உண்மை உணர்.
அன்பு மொழி மட்டும் பேசிச் செல்லும்
அறச்சிந்தனை மட்டுமல்ல காதல்
அது....புயலின் உக்கிரம், எரிமலையின்
தகிப்பு, பிரளயத்தின் நடுக்கம்,
ஆழிப்பேரலையின் உக்கிரம், மூர்க்கம்
கொண்ட அரக்கன்........
என
பள்ளி
அது கல்வியை விதைத்த நாட்களை விட கண்ணீரை விதைத்த நாட்களே அதிகம் .....
என் பெயர் என்ன ?
ஊர் சொல்கிறது கேளுங்கள்
அநாதை என்று ...
நட்புகளிடமிருந்து ஒதுங்கி சொந்த நாட்டிலே அகதியானேன் நான் ...
ஊரில் உள்ள ஜாதிகளிலே நான் தான் மிகவும் தாழ்ந்த ஜாதியாம் .....
கடவுளின் பிள்ளைகள் நாங்கள் என்று கூறுபவர்களே கடவுளும் எங்கள் ஜாதிதானா ??
கடவுளின் பிள்ளை நான் என்று பழியை போட மனமில்லை ..
அன்னை தந்தை எங்கே என்று தேட என்னில் அன்பும் இல்லை ..
அன்பென்று நினைத்து எதைத்தான் நீங்கள் வளர்க்கின்றீர்கள் ?
அரை நிமிட அற்ப சுகத்திற்காக
அன்பை ஏன் பயன்படுத்துகிறீர்கள் ??
அன்பிற்கு ஏங்கு
நண்பர்கள் (79)

தினேஷ்பாபு ஏ ரா
Salem

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

சேகர்
Pollachi / Denmark
