கடவுளின் பிள்ளைகள் நாங்கள் கடவுள்களுக்குதான் பஞ்சம் இங்கே
பள்ளி
அது கல்வியை விதைத்த நாட்களை விட கண்ணீரை விதைத்த நாட்களே அதிகம் .....
என் பெயர் என்ன ?
ஊர் சொல்கிறது கேளுங்கள்
அநாதை என்று ...
நட்புகளிடமிருந்து ஒதுங்கி சொந்த நாட்டிலே அகதியானேன் நான் ...
ஊரில் உள்ள ஜாதிகளிலே நான் தான் மிகவும் தாழ்ந்த ஜாதியாம் .....
கடவுளின் பிள்ளைகள் நாங்கள் என்று கூறுபவர்களே கடவுளும் எங்கள் ஜாதிதானா ??
கடவுளின் பிள்ளை நான் என்று பழியை போட மனமில்லை ..
அன்னை தந்தை எங்கே என்று தேட என்னில் அன்பும் இல்லை ..
அன்பென்று நினைத்து எதைத்தான் நீங்கள் வளர்க்கின்றீர்கள் ?
அரை நிமிட அற்ப சுகத்திற்காக
அன்பை ஏன் பயன்படுத்துகிறீர்கள் ??
அன்பிற்கு ஏங்கும் குழந்தை அப்படி
என்ன பாவம்
செய்தது ?
இனியும் ஒரு குழந்தை பெற்றோர்கள் இன்றி அழுதால்
இல்லாமல் போகட்டும்
மனித வர்க்கம் ....