அன்பே இது சரியா

அழகான உன் பெயரை அனுதினமும் நான் கூற
அடிநாக்கில் நீ ஒளிந்தாய் ....
அன்பாக உன்தோளில் அழகாக நான் உறங்க
அன்னையினும் மேலானாய்......
கண்ணோரம் நீர்த்துளி அது கரை தாண்டும் முன்னே துடைத்திட நீள்கின்றாய்....
எந்நாளும் உனையே நினைத்திட நீ செய்தாய்
பிறவென்ற ஒரு சொல்லை ஏன் பரிசாக தந்து போனாய் ...