senthivya - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : senthivya |
இடம் | : sankarapuram |
பிறந்த தேதி | : 24-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 1030 |
புள்ளி | : 613 |
காதலில் வெற்றி பெற்றும் ,
வாழ்க்கையில் தோற்றவன் ...
உன் கூந்தலின் வாசம் அறியேன் !
அறியும் நாள் வருகையில்,
வியப்பில்
என் அறிவை இழப்பேனோ ?
உன்னால்
என்னை
விலக்கி வைக்கவே
முடியும் !
வெறுக்க வைக்க
முடியாது !
எனது காதல் அகராதியில் !
மனதிற்கு
பிடித்த பெண்ணை
கரம் பிடிப்பதே
திருமணம் !
கண்ணுக்கும்
உடலுக்கும்
பிடித்த பெண்ணை
கரம் பிடிப்பது
அல்ல !
உடலினால் குழந்தையையும் ,
பிரசவ வலியையும் சுமப்பவள் தாயாகிறாள்...
உடலினால் வலியை சுமக்காதவள்,
மனிதனால் வலியை ஏற்று கடவுளாகிறாள்...
எண்ணியதெல்லாம் ஈடேற,
இறைவனிடம் நான் கேட்க !!
என்ன செய்தாய் புண்ணியமென,
கணக்கொன்றை அவன் கேட்க ??
கணக்கில்லா பாவமே
என் கணக்கில் வரவு இருக்க,
இருக்கும் கணக்கை கூறினால் ,
இருக்காது என் உடல் மண்ணிலென !!
ஓடோடி வந்துவிட்டேன்,
உறக்கத்திலிருந்து இரக்கத்திற்கு !!!!!!
நின் நினைவுகளை நினைத்தே
நித்தமும் நிரம்புகிறது
என் வாழ்க்கை !
கண்ணிமைக்கும் நேரத்தில் கனிந்திருந்தாலும்,
கண்மூடும் வரையில் கலந்திருக்கும் காதல் !
சண்டைகள் நிறைந்திருப்பினும்,
சமாதனாத்தில் நிறைவடையும் காதல் !
ஞானம் பெற்றவன் உபதேசித்தாலும்,
ஞானத்தில் உதிக்கும் காதல் !
தவறுகள் செய்ய வாய்ப்பிருந்தும்,
தவிர்த்து விடும் தத்துவ காதல் !
நான் என்ற வார்த்தையை,
நாம் என மாற்றிய காதல் !
பனித்துளி நீராய் இருந்த மனதை,
படையினை எதிர்க்க துணியவைத்த காதல் !
மனதினில் ஒன்றாய் சேர்ந்த பின்பும்,
மணமேடைக்காக மன்றாடும் காதல் !
ரகசியங்கள் அனைத்தும்,
ரசனையாக சொல்லும் காதல் !
ராத்திரி வேளையிலும்,
ராக்கோழியாய் கொக்கரிக்கும் காதல் !
விழியினால் பேசி வ
என் காதல் புரியவில்லை என்றால்
புரியவைத்து இருப்பேன்.. ஆனால்,
புரிந்தும் பிரிய நினைக்கிறாய் !!!
பிரிந்து புரிந்துகொண்டால்,
பிரிந்ததை நினைத்து காலம் கடத்தாதே..
காலம் கடந்தாலும், கார்மேக கண்களோடு
காதலுடன் காத்திருப்பேன்...
காலம் கடத்தாமல்,
காதலோடு வந்துவிடு !!!!
உனக்குள் உறங்கிகொண்டு இருக்கும் காதல்,
எனக்குள் விழித்துக்கொண்டு இருக்கிறது !
அதனால் தான் இவ்வளவு வலி !
எனக்குள் !