அமரகாவியம் - காதல்

கண்ணிமைக்கும் நேரத்தில் கனிந்திருந்தாலும்,
கண்மூடும் வரையில் கலந்திருக்கும் காதல் !
சண்டைகள் நிறைந்திருப்பினும்,
சமாதனாத்தில் நிறைவடையும் காதல் !
ஞானம் பெற்றவன் உபதேசித்தாலும்,
ஞானத்தில் உதிக்கும் காதல் !
தவறுகள் செய்ய வாய்ப்பிருந்தும்,
தவிர்த்து விடும் தத்துவ காதல் !
நான் என்ற வார்த்தையை,
நாம் என மாற்றிய காதல் !
பனித்துளி நீராய் இருந்த மனதை,
படையினை எதிர்க்க துணியவைத்த காதல் !
மனதினில் ஒன்றாய் சேர்ந்த பின்பும்,
மணமேடைக்காக மன்றாடும் காதல் !
ரகசியங்கள் அனைத்தும்,
ரசனையாக சொல்லும் காதல் !
ராத்திரி வேளையிலும்,
ராக்கோழியாய் கொக்கரிக்கும் காதல் !
விழியினால் பேசி விதைத்த காதல் !
விலையில்லா உயிரில் கலந்த காதல் !