முயற்சி கவிதை - உறக்கத்தில் கிடைத்த இரக்கம்
எண்ணியதெல்லாம் ஈடேற,
இறைவனிடம் நான் கேட்க !!
என்ன செய்தாய் புண்ணியமென,
கணக்கொன்றை அவன் கேட்க ??
கணக்கில்லா பாவமே
என் கணக்கில் வரவு இருக்க,
இருக்கும் கணக்கை கூறினால் ,
இருக்காது என் உடல் மண்ணிலென !!
ஓடோடி வந்துவிட்டேன்,
உறக்கத்திலிருந்து இரக்கத்திற்கு !!!!!!