இன்னும் நான் எரியவில்லை முழுதாய் இந்த வரிக்கு சொந்தக்காரர் கவிதாயினி karthika AK
இன்னும் நான் எரியவில்லை முழுதாய்
##### பின்னும் பந்த பாசங்கள் பழுதாய்
தின்னும் சுவையில் தினம் சுற்றியே
##### மின்னும் வனப்பில் மேனியை பற்றியே
மண்ணில் புரண்டு மமதை கொண்டு
******கண்ணில் குரோதம் காண்பவர் கொன்று
களிறாய் அடலாய் கலக்கும் கடலாய்
******வெளிறிய பாசம் வீழ்ந்த திடலாய்
கடக்கும் நானொரு கழிவுப் பிண்டம்
@@@@தடம் தவறித் தேடுது நல் கண்டம்
வடம் தொலைத்து வீழும் தெப்பம்
@@@@ திடம் இழந்து நாடுது நல்லப்பம் .
ஆனாலும்-
இன்னும் நான்
எரியவில்லை முழுதாய் .