யாரோ நீ -கார்த்திகா
நெருப்பின் அனல்
நீரின் சுழல்
வான் மின்னல் கீற்று
மின்மினிகளின் சிறு பொறி
இலைகளின் பசுந்துளிர்
முளைவிட்ட விருட்சம்
பின்னிரவில் அழும் ஆந்தை
பனியில் நனைந்த சருகுகள்
நிறம் மாறும் பூக்கள்
மகரந்தம் கோர்க்கும் வண்டினம்
புட்கள் தாங்கிய புல்வெளி
தேடல் தொடங்கிய இறகு
கூடுகள் உடைத்த பூச்சிகள்
வலையுடன் சிலந்தி
வட்டத்தில் வாழும் நீ,
யார் நீ என்று
தீர்மானிக்கப்படுவதில்
நீ இல்லை!!