யார் இவர்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
யார் இவர்கள்
தம் மனவியரிடமே
பகல் கொள்ளையடித்த
துரோகிகள்
பின்னர் கூச்சமின்றி
அவள் முகம் பார்க்கும்
வேஷதாரிகள்
சக்தியிருந்தும்
கேட்டு வாங்கிய
பிச்சைக் காரர்கள்
மாற்றான் சொத்தை
அபகரித்த
போலி தனவந்தர்கள்
ஏழைத் தகப்பனின்
துன்பத்தில் சிரித்த
இரக்கமில்லா அரக்கர்கள்
அடுத்தவர் உழைப்பை திருடி
செல்வந்தர்களான
கள்வர்கள்.
அத்தனை மோசடிகளையும்
புரிந்துவிட்டு
நல்லவர்கள் போல்
பாசாங்கு செய்யும்
நடிகர்கள்
மொத்தத்தில்
சந்தியில் நிற்கவைத்து
கசையடி பெறத்தகுந்த
சமூகத் துரோகிகள்.