Mohamed Uwais1 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mohamed Uwais1 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 11 |
அமெரிக்கா தேசமே !
நீ எனக்களித்த
பிரஜா உரிமை
எனக்கு வேண்டாம்..
இந்தியா தேசமே!
என்னை கெளரவித்து
நீ வழங்கப் போகும்
பாரத ரத்னா விருதும்
வேண்டாம் !
நாசாவே!
செவ்வாய்க்கு என்னை
அழைத்து செல்வதாய்
இருந்த பயணமும்
வேண்டாம்!
ஒஸ்கார் விருதுக் குழுவே!
நீங்கள் எனக்களிக்க விரும்பும்
ஒஸ்கார் விருதும்
வேண்டாம்!
கின்னஸ் புத்தகமே !
உன்னில்
என் பெயரை
பதியவும்
வேண்டாம்!
ஒலிம்பிக் கமிட்டியே!
உங்கள்
தங்கப் பதக்கத்தையும்
எனக்கு சூட்ட
வேண்டாம் !..
நோபல் பரிசுக் குழுவே!
உங்கள் நோபல்
பரிசு கூட
எனக்கு வேண்டவே
வேண்டாம் !
உலகமே!
பிரிந்து போன
என் காதல
மனிதம் எங்கே
21ம் நூற்றாண்டின்
அதி பெறுமதி வாய்ந்த சொத்து
மனித நேயம்
ஏழைகளின் வாழ்வில்
விடிவை எண்ணி எண்ணியே
எனது இரவுகள் தூக்கமின்றி
விடிந்து விட்டன
இதயமே இல்லாத
மனிதர்களின்
சுவனபுரியாகிவிட்டது உலகம்
எனக்கும் இதயமே
இல்லாமல் இருந்தால்
இங்கு நடக்கும் அநியாயங்கள் பார்த்து
நானும் அழுதிருக்க மாட்டேன் ...
அண்மைய வெள்ளத் தண்ணீரின்
பெரும் பகுதியே
சிரியாவிலும் பாலஸ்தீனிலும் சிந்தப்பட்ட
கண்ணீர்தான்
உலகில் மனித நேயம் பேச
புத்தரோ முஹம்மதோ
இனி வரப் போவதில்லை .
இனி உலக முடிவு வரை
உலகின்
அதி பெறுமதி வாய்ந்த சொத்து
மனித நேயம்.....
--மதனி உ
நீயுமா குத்துகிறாய்?
கல்லூரியில் கற்கும் போது
நண்பர்களின் குத்துப் பேச்சில்
துளைந்தது நெஞ்சம்...
வளர்ந்து இளைஞன் ஆனபோது
ஊராரின் குத்துப் பேச்சில்
இன்னும் துளைந்தது கொஞ்சம்
முதன் முதலாய்
அவளைக் காதலித்த போது
அவள் குத்திய வார்த்தைகளால்
சல்லடையானது நெஞ்சம் ....
இன்று உன்னைக்
காதலிக்கும் போது
நீயுமா குத்துகிறாய்?
ஏற்கனவே கிழிந்து போன உள்ளத்தில்
நீயும் குத்த
ஏது இடம்?
அந்தப் பரந்த
சோலையில் நான்
காலெடுத்து வைக்கின்றேன்
காலைப் பொழுதை ஒத்த
சூழ்நிலை..
எங்கும்
ஆளை மயக்கும்
தெய்வீக வாசனை....
அருவிகளின் சலசலப்பு...
வண்டுகளின் ரீங்காரம் ...
பட்சிகளின் சங்கீதம் ...
வண்ணப் பூக்களின்
வரவேற்பு...
மெது மெதுவாக
முன்னே நடக்கிறேன்....
திடீரென என் முன்னே
என் தேவதை
புது மணக் கோலத்தில்...
என்னை நோக்கி
ஓடி வருகின்றாள்
எனக்குள்
அப்படி ஒருவியப்பு...இவள்
எப்படி இங்கு என்று...
வைத்த கண் வாங்காமல்
அவளையே பார்க்கிறேன்..
சந்தேகம் இல்லை
அவளேதான்..
நான் உலகத்தில்
என் உயிரை விடவும் நேசித்த
அவளேதான்...
சகலதையும் மறந்து
பைத
யார் இவர்கள்
தம் மனவியரிடமே
பகல் கொள்ளையடித்த
துரோகிகள்
பின்னர் கூச்சமின்றி
அவள் முகம் பார்க்கும்
வேஷதாரிகள்
சக்தியிருந்தும்
கேட்டு வாங்கிய
பிச்சைக் காரர்கள்
மாற்றான் சொத்தை
அபகரித்த
போலி தனவந்தர்கள்
ஏழைத் தகப்பனின்
துன்பத்தில் சிரித்த
இரக்கமில்லா அரக்கர்கள்
அடுத்தவர் உழைப்பை திருடி
செல்வந்தர்களான
கள்வர்கள்.
அத்தனை மோசடிகளையும்
புரிந்துவிட்டு
நல்லவர்கள் போல்
பாசாங்கு செய்யும்
நடிகர்கள்
மொத்தத்தில்
சந்தியில் நிற்கவைத்து
கசையடி பெறத்தகுந்த
சமூகத் துரோகிகள்.
இதயமும் காகிதமும்
இதயத்தைப் போலவே
விழுந்து கிடக்கிறது காகிதம்
நல்லவர்களது மனசு
எழுதப்படாத காகிதம்
இரண்டுமே வெள்ளை
அடிக்கும் சிறு காற்றுக்கெல்லாம்
எங்கெல்லாமோ பறக்கும்
காகிதம் போல்
மனசும் உள்ளே எழும்
எண்ணப் புயல்களுக்கு
ஈடு கொடுக்க முடியாமல் அலைகிறது
காகிதத்தில் குழந்தையின்
கிறுக்கல் போல
மனசிலும் பல புரியாத
உணர்வுக் கிறுக்கல்கள்
மழையின் பின்னர்
நிலத்தோடு ஒட்டிக் கொண்ட
காகிதம் போல்
மனசுள்ளும் விடாப்பிடியாய்
ஒட்டிக் கொண்ட சோகங்கள்
சுக்கு நூறாய்
கிழிக்கப் படுவது
புறக்கணிக்கப் பட்ட
காதல் கடிதம்
மட்டும் தானா ?
மனசும் சிலரின்
குத்துப் பேச்சினால்
எனது காதலின் மரண ஊர்வலத்தில்
நான் மட்டும் தனியே
அழுது கொண்டு போகின்றேன்
துணைக்கு யாரையும்
அழைக்க முடியவில்லை
இது யாருக்கும்
சொல்லிக் கொள்ள முடியாத
மரண ஊர்வலம்
என் உறவுகளே !
இந்த ஊர்வலத்தில்
நீங்கள் வர வேண்டியதில்லை ....
ஆனால் நீங்கள்
வரவேண்டியிருக்கும் ...
பின்னால் வரும்
எனது மரண ஊர்வலத்தில் ....