உன் இதயத்தில் உறங்கிட ஆசை
உன்னை கடந்து சென்ற பறவை நான்
பாதை மறந்து நிற்கின்றேன்
உன் வாசம் தீண்டிய வண்டு நான்
மணத்தில் மயங்கி நிற்கின்றேன்
உன் தேகம் தீண்டிய காற்று நான்
சுவாசம் திணறிப் போகின்றேன்
உன் மேனியை போர்த்திய ஆடை நான்
உடல் விட்டு விலக மறுக்கின்றேன்
தாய் மடியை தேடிடிடும் குழந்தை நான்
உறக்கம் தொலைந்து கிடக்கின்றேன்
உன் விழிகளை தழுவிடும் கனவு நான்
வழி தேடியே நானும் அலைகின்றேன்
உன் விரலிலே கிடந்திடும் மோதிரம் நான்
விரல் அணைப்பிலே மயங்கி உறங்குகிறேன்
உன் அணைப்பினை கேட்டிடும் தலையணை நான்
இரவினை தேடி அலைகின்றேன்