மருத்துவர் தினம்

மருத்துவர் தினம்

உயிர் காக்கும்
உன்னத சேவையை
உயிர் மூச்சாக
செயல்படுத்தும்
உன்னதமான
மருத்துவர்களே!.......

அறிவு கொடுக்கும் ஆசானும்
பிணி நீக்கும் மருத்துவனும்
கடவுளென வணங்குகின்றோம்!.....

நோய் நீக்குவது
மட்டுமல்லாமல்
நோய் தடுக்கவும் செய்கிறது,
உன் கண்டுபிடிப்புகள்......

பெருகிவரும்
நோய்களுக்கு
அசராமல் மருந்து கொடுக்கின்றன
உன் விஞ்ஞான அறிவுகள்!.....

இந்நாள் போல
எந்நாளும் உங்கள் சேவை
எங்களுக்கு தேவை தான்.....

உங்களுடைய நலம் தான்
எங்களையும் நலமாக்கும்!.....
இந்நாள் போல எந்நாளும்
உங்கள் பணி தொடர
மனதார வாழ்த்துகிறோம்!.......

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (1-Jul-14, 5:41 pm)
Tanglish : marutthuvar thinam
பார்வை : 4894

மேலே