எங்கும் நீ தெரிய எதிலே நான் மறைய

முற்றி போன காதல் கொட்டிக்கிடக்குது வான் வீதியிலே
ஒன்றொன்றாய் சேகரித்தேன் அதை சேர்க்கும் இடம்தான் தெரியவில்லை

சொட்டு சொட்டாய் வீழும் கண்ணீர் -காதல்
செடி பட்டுப் போகாமல் பார்த்துகொள்ளும்

முட்டி நிற்க்கும் உன் நினைவுகளெல்லாம் -ஏன்
வந்ததென்று பகலைத் திட்டும்

வந்து போகும் தென்றல் காற்றும் என் ஆன்மாவை சீண்டிப் போகும்
அது இல்லை என்று தெரிந்த பின்னே ஏமாற்றத்தில் சோர்ந்து போகும்

இருளின் மீது கொண்ட காதலை சில ஒளிகளும் இங்கே சோதிக்கும் -என்
இமைகள் திறவா நிலை கண்டு இருளிலே அதுவும் மூழ்கிப்போகும்

வண்ணங்கள் மீது காதல் கொண்டேன் அதில் வாழும் உந்தன் நினைவுகளால்
கண் மூடினேன் அது காட்டுகிறது கறுப்பை மட்டும் காயங்களாய்

உன்னை எதிர் பார்த்தநாட்கள் எல்லாம் என்னை எதிர்பார்த்து திரும்பி விட்டன
உன் விழி தேடி காத்திருக்கும் உயிரே இன்னும் மீளவில்லை

அன்பின் பிடியில் ............................... நிஷா

எழுதியவர் : நிஷா (30-Jul-14, 11:46 am)
சேர்த்தது : நிஷா
பார்வை : 99

மேலே