தவறுகள் அறியா தெய்வம் நீ
விடிந்தாலும் பிரிந்துட ஏங்குதே நிலா -உன்
பிறை முகம் கண்ட மயக்கத்தில்
மலர் கூட உன் மடி உறங்க ஏங்குதடி -உன்
பட்டு வண்ண மேனியை தீண்டியதால்
எச்சில் ஒழுக நீ சிரிக்க எட்டி நிற்கிறதே ஈரேழு
உலகின் அழகும்
விரல்களின் ஜாடையோ கதை பேசும் நூறு
புரியாத பாசையும் புரிந்திடும் உன்னோடு
விரல் சூப்பும் அழகும் விழி பேசும் கவியும்
உள்ளத்தை சிறையிடுதே
கவி பேசும் உயிரே கவலை இல்லா மலரே
கண்மூடி நீ உறங்கு
காலையிலே நீ மலரு