போகாமல் போகிறாள், பொல்லாத கண்மணி,,
போவென் றுரைப்பாள்!
போவென் றுரைத்தவள்,
போகாமலே யெந்தன்
உள்ளுக்குள் போனால்,
நானென்ன செய்வேன்!?
வாவென் றழைக்கவென்
வாய் இருந்தாலும்
வார்த்தைகள் கட்டுண்டு
வதைபட்டு அழிவதை
நானென்ன சொல்வேன்?!
நேரிலா ஆனந்தம்
நிலமிதில் காண்பித்து
நில்லாமல் போகின்றாள்!
மனங்கொய்து - கண்மணி
சொல்லாமல் போகின்றாள்!
நோகுமென் நெஞ்சத்துள்
நோகாமல் தங்கியே
நோம்பது நோட்கின்றாள்!
பொல்லாத பெண்ணவள்
வேம்பது சேர்க்கின்றாள்!
தாகமா யிது?!
மோகமோ யிது?!
வேர்விடும் சோகம்,
வேகமாய் நெஞ்சுள்ளே
வெந்தழல் மூட்டுதே?!
பொன்மலர் வாசமுன்
இன்சுவைச் சொல்லின்றி,
வன்துயர் மீட்டுமென்
ஏக்கத்தை நீக்கவே,
வேகமாய் ஓடிவா.........!!
888888888888888888888888888888888888
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்