கத்திக் கார்த்திக் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கத்திக் கார்த்திக் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Aug-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 270 |
புள்ளி | : 8 |
சென்னை... சுயத்தொழில்
அரவம்
கேட்கும்பொழுதெல்லாம்
அப்புரப்படுத்தப்படும்
இரகசியம் நீ .....
உறவுகள் ஏற்க மறுத்த .....
நான் மட்டும் ஏற்றுக்கொண்ட
முதல் அதிசயம் நீ ....
திருமண நாளும் மறக்கும் -நீ
திரும்பிப் பார்த்த அந்நாள்
எப்படி மறக்கும் என்னுள்ளம் .....
என் குழந்தைகள் கையிலும்
என் மனைவி கண்ணிலும்
படாமல் இருக்க-
உன் நினைவுகளை
நினைவுப்படுத்தும்
பயணச்சீட்டை மட்டும்
பத்திரமாக வைத்திருக்கிறேன்....
உன் ஊரின் பெயரை சுமந்த
பயணச்சீட்டும் .....
உன் நினைவை சுமந்த
என் மனமும்
இன்னமும் மாறாமலே
இருக்கின்றன .......
பார்வைகள் பினைய...
கைகள் கலக்க ...
உடல்கள் உரச ...
காமம் கசக்க ...
காதலும் பிரிந்தது...
நல்ல மாமனை வில்லனாக்கி ,
நைசாக நாமும் விலகினோம் ...
நேரத்தின் மீது பழிச்சுமத்தி ,
நேக்காக நாமும் நழுவினோம் ....
அதீத சதைப்பற்று கேடு
விழுந்து தெளிவதே விதி
எவருக்கும் .....
அறிவர் அறிவார் .....
நிர்வாணங்கள் அனைத்தும்
நிம்மதிகொண்டன ....
ஆறறிவுயிர் மட்டும் அர்த்தமின்றி
அமைதியிழந்தன .....
நான் குழந்தையாக பிறந்து
வளர்ந்துவிட்டேன் ....
எனக்கு கொடியிடையில் இருக்கும்
பூவும் தெரிகிறது ......
பூவினுள் தேனெடுக்கும்
வண்டும் தெரிகிறது ....
கட்டபொம்மனின் வழி வந்தவள் தான்...
என்ன.....
கரப்பான் பூச்சி என்றால் மட்டும்
கூச்சலிட்டுவிடுவாள்.....
அவன் முதல்முறைப்
பார்த்தப் பார்வைதான்
எனது மஞ்சள்நீராட்டுவிழா
அழைப்பிதழ்க்கான பிள்ளையார்சுழி ....
கவிதை ஒன்று காலாவதி ஆனது .....
கவிதை ஒன்று காலாவதி ஆனது .....
கவிதை போட்டிக்கென்று எழுதப்பட்டது
காதல் கவிதை எழுதி முடியுமுன்னே
போட்டி முடியுற்றதாய் சொன்னாய்
பரிசு விழுந்து விட்டப் பொருளாய்-நீ
பரிசுப்பெற்றவன் பெயருடன் வந்தாய்....
கவிதை ஒன்று காலாவதி ஆனது ....
கவிதை ஒன்று காலாவதி ஆனது.....
கவிதை முடியுமுன்னே போட்டி முடிந்தது .....
பரந்த உலகில்
என்னை
சிறை எடுத்தாய்
உன்
கண்களின் வழியாக......
கடலில் முத்துக்கள் சிதறி கிடந்தன,
ஆனால்,
அவை விலை உயர்ந்தன.
நிலத்தில் விதைகள் சிதறி கிடந்தன,
அவை,
முத்துக்களை விட உயர்ந்தவை,
இவை போல பரந்த உலகில் நம் நட்பும்.........
வாழ்க்கை என்பது
நீர் ஓட்டத்தை போல,
ஓடி கொண்டே இருக்கும்...........
பிறப்பு இறப்பு எல்லா உயிர்க்கும் சமம்
நட்புக்கு இல்லை..............
கடலின் ஆழம் தெரியும்,
ஆனால்,
நட்பின் ஆழம் தெரியாது.......
ஊரின் கண்களாக இருப்பது வீடுகள்
நாட்களின் கண்களாக இருப்பது நேரங்கள்
கையின் கண்களாக இருப்பது விரல்கள்
உறவுக்கு கண்களாக இருப்பது நட்பு மட்டும் தான்......