பயணச்சீட்டும் பார்வையும்

அரவம்
கேட்கும்பொழுதெல்லாம்
அப்புரப்படுத்தப்படும்
இரகசியம் நீ .....

உறவுகள் ஏற்க மறுத்த .....
நான் மட்டும் ஏற்றுக்கொண்ட
முதல் அதிசயம் நீ ....

திருமண நாளும் மறக்கும் -நீ
திரும்பிப் பார்த்த அந்நாள்
எப்படி மறக்கும் என்னுள்ளம் .....

என் குழந்தைகள் கையிலும்
என் மனைவி கண்ணிலும்
படாமல் இருக்க-
உன் நினைவுகளை
நினைவுப்படுத்தும்
பயணச்சீட்டை மட்டும்
பத்திரமாக வைத்திருக்கிறேன்....

உன் ஊரின் பெயரை சுமந்த
பயணச்சீட்டும் .....
உன் நினைவை சுமந்த
என் மனமும்
இன்னமும் மாறாமலே
இருக்கின்றன .......

எழுதியவர் : பார்வைதாசன் (15-Sep-14, 3:49 pm)
பார்வை : 77

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே