+இந்திர லோகத்தை காதலில் காட்டு+

**பத்தல பத்தல அன்பு பத்தல‌
****வெத்தல வெத்தல ஏன் செவக்கல‌
******குத்தமா சுத்தமா எதுவும் புரியல‌
********மொத்தமா நித்தமும் மனசு சரியில்லே

**உத்தம புத்திரி என்னையவே சுத்துற‌
****சித்தத்தை முழுதும் வாட்டி வதைக்கிற‌
******சத்தமா மனசு கூச்சல் போடுதே
********நத்தையா நொடிகள் மெல்ல நகருதே

**வாடி உள்ள சிறைதனை விடுத்து
****தாடி எனக்கும் காதல் குருத்து
******நாடி நரம்பெல்லாம் உனையே நினைக்குதே
********தாடி எனைவிட்டு போக துடிக்குதே

**மந்திரம் எதுவும் உனக்கு தெரியுமா
****தந்திரம் உந்தன் பார்வையின் வரமா
******எந்திரம் போன்ற வாழ்க்கையை மாற்று
********இந்திர லோகத்தை காதலில் காட்டு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Sep-14, 2:44 pm)
பார்வை : 167

மேலே