நிலவில் பிறக்கவில்லை

அவள்
நிலவில் பிறக்கவில்லை
நீல வானில் நடக்கவில்லை
நிலவுக்குப் போட்டியாக
பூமியில்தான் பிறந்தாள் !
பூக்களுடன் சிரிக்கிறாள்
புன்னகையுடன் நடக்கிறாள்
கண்களால் பேசுகிறாள்
கவிதையாய் விரிகிறாள்
அந்தியின் அழகிய செய்தியை
உதடுகளால் சொல்லாமல் சொல்லுகிறாள்
கனவுத் திரை தன்னில்
கார்முகில் மின்னலாய் வருவாள்
இரவுத் திரையைக் கிழித்து வரும்
இளங்காலைப் பரிதி போல்
இதயத்தில் ஒவ்வொரு நாளும்
உதயமாகி வருவாள் .

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Sep-14, 2:30 pm)
பார்வை : 101

மேலே