புது உதயம் வேண்டும்---------நிஷா
கருப்பு நிற மலர்
ஒன்று வேண்டும்-என்
கண்ணீர் பட்டு அது
சிரிக்க வேண்டும். .....
கையில் காகிதத்தாள்
ஒன்று வேண்டும்- என்
கற்பனையில் அது
பூக்க வேண்டும். ....
கரும்பின் சிறு பாதி
எனக்கு வேண்டும்..
கற்கண்டாய் அதன் சுவையில்
கரைந்திடத்தான் வேண்டும். ...
காற்றோடு பேசும் நல்ல
கார்மேகம் வேண்டும். ..
கார்கால மேகத்தின்
கண்ணீரில் குளித்திட வேண்டும். ..
மறக்கும் மனம் ஒன்று
வேண்டும் நான்
மலரோடு பேசி சிறிது
மகிழத்தான் வேண்டும்.....
இதயத்தின் பாரத்தை இறக்கிட
இடமொன்று வேண்டும். .
இனிய உதயம் எனக்குள்ளே
உதித்திட வேண்டும். ...