கலவைகள்

மறைந்த தொடர்வண்டி சத்தம்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
யாசித்தவனின் குழலோசை

வயல்வெளி
புற்கள் மேல் விழுகிறது
கொட்டிய செங்கல்

உயர்ந்த கட்டிடம்
மேல் நோக்க விழுகிறது
பெருமூச்சு

உலகவெப்பமயமாதல் கருத்தரங்கு
விஞ்ஞானியின் வருகைக்கு தயாராகிறது
குளிரூட்டிய அறை

சிட்டுக்குருவி கவிதை
வெற்றிக்கு பரிசாகிறது
சாம்சங் கைபேசி

ஓய்வெடுக்கும் இரவு
ஈரமான வாயுடன் வருகிறது
சிறுவனின் புல்லாங்குழல்

தேர்வறை
கூட்டிப் பெருக்க வருகின்றன
விரல் நகங்கள்

இடையில் கட்டிடக் கம்பிகள்
மேலெழுந்து வருகிறாள்
நிலவுப் பாட்டி

செங்கல் சுமந்தவன்
கட்டத் தவிக்கிறான்
பள்ளிக் கட்டணம்

தூக்கி வைத்த மூட்டை
நிமிர மறுக்கிறது
முதுகுத்தண்டு

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (19-May-17, 9:49 am)
பார்வை : 219

மேலே