அப்பா அம்மா

கால் நனைத்த சிறுமி
நீந்திய நினைவோடு கரையேறுகிறது
தாத்தாவின் பாதச்சுவடு

மறைந்த நிலவு
மேகத்தை விரட்டுகிறது
தென்னைக்கீற்று

தீர்ந்த மெழுகுவர்த்தி
மிச்சமிருக்கிறது
வீட்டுப்பாடம்

ஒளிரும் தெருவிளக்கு
எழுதி(த) வரு‌கிறது
விரலின் நிழல்

படிக்கும் குழந்தை
புரியாமல் மனனம் ஆகிறது
அப்பாவின் கெட்டவார்த்தை

குடும்பச் சண்டை
வீதிக்கு வருகிறது
பிள்ளையின் படிப்பு

அப்பா அம்மா சண்டை
அப்படியே நிற்கிறது
குழந்தைக்கு தொண்டையில் சோறு

அழுத சிறுமி
கண்களை துடைத்துக் கொள்கிறாள்
கன்னம் சிவந்த அம்மா

- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (19-May-17, 9:45 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : appa amma
பார்வை : 201

மேலே