ஈழத்தில் அன்று
கிழிந்த சீலை
தேடிப் பிடித்திருக்கிறது
அழுத குழந்தை
திறந்திருந்த கதவு
சிதறிக் கிடக்கிறது
மல்லிகைப்பூ
நிறம்மாறிய வானம்
சூழ்ந்து வருகிறது
கரும் புகை
வேர் புதைந்த மரம்
உதிர்ந்து வருகிறது
ஒருத்தியின் ஆடை
வேலை தேடிய மகன்
வாங்கி வருகிறான்
ஏமாற்றம்
பள்ளி சென்ற மாணவி
கொண்டு வருகிறாள்
முகத்தில் கீறல்
அதிகாலை நேரம்
தாழ்திறக்க விழுகிறது
சூடிய பூ
பறக்கும் பறவைகள்
மரத்தடியில் கிடக்கிறது
சிதறிய தோட்டா
- கி. கவியரசன்