எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொப்புள் கொடி அறுபட்ட போது உன்னை பிரிந்த வலியில்...

தொப்புள் கொடி அறுபட்ட போது
உன்னை பிரிந்த வலியில்
அழத்தொடங்கினேன்

சீம்பால் என் தேகத்தில்
எலும்புகளில் நரம்புகளில்
சதை திசுக்களில் ஓட்டமாய்

அடிவிழும் போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

தூலியை கண்ட போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

தூக்கம் தொலைத்த போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

துரும்பு என்மீது விழும்போது
தூண் விழுந்தது போல்
துடிதுடித்துப் போனவளே

உன் சிதைக்கு தீ மூட்டி
நான் வேகாமல் இருப்பது
சத்தியமாய் மோசடி 
#அன்னையர்தினம்

நாள் : 13-May-18, 8:11 am

மேலே