எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குடியிருந்த கோவில் / வாழும் தெய்வமாம் அன்னையர் தின வாழ்த்துகள்.

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 22-May-2018 8:02 am

தொப்புள் கொடி அறுபட்ட போது
உன்னை பிரிந்த வலியில்
அழத்தொடங்கினேன்

சீம்பால் என் தேகத்தில்
எலும்புகளில் நரம்புகளில்
சதை திசுக்களில் ஓட்டமாய்

அடிவிழும் போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

தூலியை கண்ட போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

தூக்கம் தொலைத்த போதெல்லாம்
அம்மா அம்மா என்று
அழத்தொடங்கினேன்

துரும்பு என்மீது விழும்போது
தூண் விழுந்தது போல்
துடிதுடித்துப் போனவளே

உன் சிதைக்கு தீ மூட்டி
நான் வேகாமல் இருப்பது
சத்தியமாய் மோசடி 
#அன்னையர்தினம்

மேலும்


 *அன்னையர் தினம்* 
 Sunday, May 14, 2017 “அ”வெனும் எழுத்தில்லை யென்றாலெதிலும்
ஆரம்பமே இல்லையென்றாகி விடுமம்மா..!

அகரவரிசை எழுத்தில் முதலெழுத்தே..
அம்மாவிற்கும் ஆரம்ப எழுத்து..!

“அம்மா” இல்லையென்றால் பிறகு
“அனாதை” என்றாகி விடுமன்றோ..?

அடிபட்டால் அவசரமாக வரும்சொல்
“அம்மா” வெனுமலரல் வார்த்தைதானே..!

சொந்த மென்றே சொல்லே
பந்தமுடன் அம்மாவிடம்தான் பிறக்கும்..!

உறவனைத்துக்கும் ஒரு பாலம்
உண்டென்றால் அது “அம்மா”..!

ஆயிரம் உறவுகளுக் கொரேயொரு
அர்த்தம் சொல்வதும் “அம்மாதான்”..!

தந்தை உயிரெனும்கரு கொடுப்பாரதற்கு
தாயென்பவள் வடிவம் கொடுப்பாள்..!

தாயில்லையேல் நமக்கு தந்தையுமில்லை..!
தாயின்றியெதுவும் இங்குயிர்கள் பிறந்ததில்லை..!

அன்னையர் “தினம்” என்றில்லாமல்..
உன்னை “யுகமிருக்கும்” வரையில்..

மகத்தான சக்தியுடைய “அம்மாவை”.. 
மறவாமல் மண்ணுயிர்கள் அனைத்துமே..

கொண்டாடவேண்டும் “அம்மா”..!

அன்புடன் பெருவை பார்த்தசாரதி      

மேலும்

கருத்துப் பதிவுக்கு நன்றி..பனிமலர் அவர்களே 15-May-2017 9:58 am
அழகிய வரிகள் தாலாட்டுது ,வாழ்த்துக்கள் பார்த்தசாரதி 14-May-2017 8:23 pm

உன்னோடு என்னை இணைத்த தொப்புழ் கொடி உறவு இனி வரும் பிறவிகளிலும் தொடரட்டும்! அன்னையர் தின வாழ்த்துக்கள்..,

மேலும்


மேலே