சாந்தி முகூர்த்தம்
மஞ்சம் வந்திட
நெஞ்சம் அஞ்சிட
பாவை கொதித்து நின்றாள்
தேனை குடித்திட
தீயை பருகிட
காளை தவித்து நின்றான்
குயிலின் குரல்
ஊமை பாஷையில்
நிலவின் விழி
மகரந்த சேர்க்கையில்
கூந்தல்
பாயானது
காதல்
நோயானது
காமம்
தீயானது
இருவரை
ஒருவராய்
நகலெடுத்தனர்
பத்து மாதத்தில்
பிரதி பேசும்
காதல் சின்னமாய்
கவிதை வண்ணமாய்
கவரி வீசும்